;
Athirady Tamil News

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இருநாள் விவாதம் !!

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றம் நாளை (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

ஆட்கள் பதிவு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2334/47 இல் வெளியிடப்பட்ட உத்தரவுகள் நாளை (19) விவாதிக்கப்பட உள்ளன.

அதனையடுத்து சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி எண் 2346/02 இல் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகள் புதன் (20) விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளன.அதன் பின்னர் ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணை மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி!! (கட்டுரை)

ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!

உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!

“இது அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி” !!

எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!

எதற்காக வீடியோ நீக்கப்பட்டது?

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!!

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.