;
Athirady Tamil News

மிரள வைக்கும் வடகொரிய அதிபரின் புகையிரத பயணம் !!

0

சர்ச்சைகளுக்கு பெயர்போன வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அதிகளவில் புகையிரத பயணத்தையே விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபரான கிம்ஜோங் உன் மாத்திரமல்லாது, அவரது தந்தை, தாத்தா என யாவருமே புகையிரத பயண விரும்பிகளாகவே இருந்துள்ளனர்.

குறிப்பாக, ஜெட் விமானத்தின் சோதனை பயிற்சியின் போது, அது வெடித்து சிதறியமையை நேரடியாக பார்த்தமையினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே அவர்கள் விமான பயணத்தை பெரிதும் தவிர்த்து வந்துள்ளனர்.
2018 கிம் அதிபராக பதவியேற்றதிலிருந்து கிட்டத்தட்ட 09 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அப்பயணங்கள் பொதுவாக 2018, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே நிகழ்ந்துள்ளது.

கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போதுதான் ரஷ்யாவிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கிம்ஜோங் உன் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட புகையிரத பயணம் குண்டு துளைக்காத சிறப்பு புகையிரத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 மணிநேரங்களுக்கு மேலாக 1150 கிலோ மீற்றர்கள் அவர் ரஷ்யாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், அவர் பயணித்த புகையிரதமானது 90 பெட்டிகளை கொண்டமைந்துள்ளதுடன், சகல வசதிகளுடன் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவிற்கு அவர் மேற்கொண்டுள்ள பயணமானது உலக நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகள் ரஷ்யா, வடகொரியா நாடுகளுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரகசிய ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.