புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள்: பிரதமர் மோடி!!
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள் 1952-ல் இருந்து 41 நாட்டின் தலைவர்கள் இங்கு நம்முடைய எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முத்தலாக் போன்ற முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக செய்யப்பட்ட பல தவறுகள் திருத்தப்பட்டுள்ளன. தீவிரவாதம், பிரிவினை ஆகியவற்றிற்கு எதிராக போரிட, பாராளுமன்றத்தில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது நம்முடைய சிறந்த அதிர்ஷ்டம் இன்று, பாரத் 5-வது மிப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 3-க்கு கொண்டு வருவதே லட்சியம். இங்குள்ள சிலர் அப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால், இந்தியா 3-வது இடத்திற்கு உயரும் என உலகம் உறுதியாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாக பார்க்காத வகையில் இந்தியா தற்போது திகழ்கிறது. இந்த நேரத்தில் நாம் வசித்து வருவது அதிர்ஷ்டம். இந்தியாவின் லட்சியத்தை உயர்த்தும் எண்ணத்தோடு அனைத்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து விவாதங்களும் நடைபெற்றுள்ளன. நாம் மேற்கொள்ளும் அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இந்திய அபிலாஷைகளுக்கு முன்னுரிமையாக இருக்கும். இந்தியா பெரிய லட்சியங்களை நோக்கி நகர வேண்டும். சிறு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம். இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்