;
Athirady Tamil News

கேரளாவில் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக புகார் கொடுத்தவர் மர்ம மரணம்!!

0

கேரள மாநிலம் கொச்சி களமசேரி பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்பாபு (வயது 47). சமூக சேவகரான இவர், கேரளாவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர். இந்த நிலையில் நேற்று கிரீஷ்பாபு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் படுக்கையிலேயே பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மகள் வீணா விஜயன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் கேரளாவை சேர்ந்த ஒரு தாதுமணல் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் கிரீஷ்பாபு.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரீஷ்பாபு இறந்துவிட்ட தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வார ங்களுக்கு ஒத்தி வைக்கப்ப ட்டது. முதல்-மந்திரி மகள் உள்பட பலர் மீதான வழக்கு விசார ணைக்கு வந்த நிலையில், வழக்கு தொட ர்ந்தவர் மர்மமாக இறந்தி ருப்பது கேரளாவில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.