;
Athirady Tamil News

சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு- மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அமைச்சர் நோட்டீஸ்!!

0

நாமக்கல்லில் சவர்மா சாட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், துறை ரீதியாக விளக்கம் கேட்டு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கும், மாவட்ட நியமன அலுவலருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகையில், ” கடந்த 17ம் தேதி உணவு பாதுகாப்பு குழு ஆய்வு செய்ததில், அந்த உணவகத்தில் 16ம் தேதி இரவு 200 பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர். உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனது உத்தரவுபடி ஆகஸ்டு 28ம் தேதி தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 280 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இப்படி பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் வருத்தம் அடைய செய்கிறது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.