;
Athirady Tamil News

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இளஞ்சிவப்பு புறா!!

0

முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவை இனத்தை சேர்ந்த புறாக்கள் கதிர் வடிவம் கொண்டவை. உலகம் எங்கும் புறாக்கள் அதிகமாக காணப்படுகின்றன. பல்வேறு அளவுகளில் அவை காணப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின் புகைப்படம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துடிப்பான இறகுகளுடன் கூடிய இந்த புறாவை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடனே அவர்கள் புறாவுக்கு உணவுகளை அந்த புறா அமர்ந்திருந்த கூரை மீது வீசினர். அவற்றை ஏற்றுக்கொண்ட புறாவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது. மேலும் இந்த அரியவகை புறாவை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர். புறாவின் இந்த தோற்றம் நகர மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தனித்துவமாக இந்த நிறம் உருவானதா? அல்லது யாரேனும் புறா மீது சாயத்தை பூசினார்களா? அல்லது புறா அதன் நிறத்தை மாற்றியமைக்கும் பொருள் மீது விழுந்ததா? என பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.