ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்கவும் – கனடா நாட்டவர்க்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனடா நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும். தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.