காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு – அமெரிக்கா கவலை!!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டினார். இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கனடா கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.