பாரம்பரிய சிலையை உடைத்த சுற்றுலா பயணிக்கு ரூ.16 லட்சம் அபராதம்!!
பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர். இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த மையத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலா பயணியை கைது செய்தனர். அவர் போதையில் இருந்துள்ளார். தான் சேதப்படுத்திய சிலையின் மதிப்பு தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை அந்த சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.