மக்கள் தூற்றுவோர் தூதுக்குழுவில் ஏன்?
அரச தரப்பில் சிறந்தவர்கள் பலர் இருக்கும் போது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஐ.நா தூதுக்குழுவினராக இணைத்துக் கொண்டுள்ளமை ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் சிறப்பு தூதுக் குழுவினர் சென்றுள்ளார்கள்.
நாட்டின் விவசாயத்துறையை அழித்து நாட்டு மக்களின் உணவை முழுமையாக இல்லாதொழித்த மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நியூ டைமன், எக்பிரஸ் பேர்ல் கப்பலை நாட்டுக்குள் அழைத்து கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வழக்குகளுக்கு ஆஜராகிய அரச தரப்பின் பின்வரிசை எம்.பி தொலவத்தே ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்பு தூதுக்குழுவினராக சென்றுள்ளார்கள்” என்றார்.