;
Athirady Tamil News

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக நாங்கள் வாக்களித்தோம்: அசாதுதீன் ஓவைசி!!

0

பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது. 454 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம் என ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். நானும், எனது கட்சியின் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தோம் என்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கான துணை ஒதுக்கீட்டை வழங்கவில்லை.

ஓபிசி மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கீடு வரம்பில் சேர்க்கக்கோரி இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடுகிறார்கள் என்பதை நாடு அறியும் வகையில் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓபிசி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான பிரதிநித்துவத்தை பாராளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகியவற்றில் இந்த மசோதா வழங்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், அரசு அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது?. நாட்டில் 7 சதவீத முஸ்லிம் பெண்கள் உள்ளனர். ஆனால், அவர்ளுடைய பிரநிதித்துவம் சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் 0.7 சதவீதம் மட்டுமே ஆகும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.