;
Athirady Tamil News

நண்டு உணவுக்கு இவ்வளவு பில்லா?… போலீசை அழைத்த ஜப்பான் சுற்றுலா பயணிகள்!!

0

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு (Crab Dish) பிரமாதமாக இருக்கும். அதன்விலை 20 டாலர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நண்டை அவர்களது மேஜையில் வைத்து இதை சமைக்க சொல்லலாமா? எனக் கேட்டுள்ளார். இவர்களும் ஓ.கே. சொல்லியுள்ளனர். ஜுன்கோ தனது நண்பர்களுடன் நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார். அப்போது நண்டு உணவுக்கு 56 ஆயிரம் (680 டாலர்) பில் போட்டிருப்பதை கண்டு வாயடைத்துப் போனார்.

அவருடன் வந்தவர்களில் ஒருவர், ”ஓட்டலில் உள்ள அனைத்தையும் எங்களுக்காக சமைப்பார்கள் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. மற்ற ரெஸ்டாரன்ட்களில் அவற்றில் ஒரு பகுதியைத்தான் சமைப்பாளர்கள்” என்று தெரிவித்தார். இதுகுறித்து ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்க, அவர்கள் 100 கிராம் நண்டு டிஷ் 20 டாலர். உங்களுக்கு 3,500 கிராம் நண்டு டிஷ் பரிமாறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சப்ளை செய்த நபர் அவ்வாறு தெரிவிக்கவில்லையே, நாங்களும் மொத்தத்தையும் ஆர்டர் செய்யவில்லையே, என்று ஜுன்கோ தெரிவித்து, போலீஸை அழைக்க கேட்டுக்கொண்டார். அதன்படி போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது ஜுன்கோ நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார். அதற்கு ரெஸ்டாரன்ட் தரப்பிலும், தங்களது சப்ளையர் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துரைத்தார் என்று விளக்கம் அளித்தனர். இறுதியாக ரெஸ்டாரன்ட் 78 டாலர் (6,479 ரூபாய்) தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்பின் ஜுன்கோ மீதி பணத்தை செலுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.