தட்டச்சு அல்லது கையால் எழுதுவதற்கும் சிந்தனை, நினைவாற்றலுக்கும் என்ன தொடர்பு ? !!
தத்துவ ஞானி பிரெட்ரிக் நீட்சே, 1882 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் மல்லின்-ஹேன்சன் என்ற இயந்திரத்தைப் பெற்றார். அது விசைகளை (keys) கொண்ட ஒரு தனித்துவமான விசைப்பலகை(Keyboard) போன்ற இயந்திரம். இந்த இயந்திரம் வந்த பிறகு, அவர் கையால் எழுதுவதற்கு சாத்தியமில்லாமல் போனது. அதனால், அவரத சிந்தனை மோமடைந்துள்ளது.
அந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை அவர் தொடர்ந்து எழுதுகிறார், ஆனால், ஒரு புதிய இயந்திரத்தில் எழுதுகிறார், கையால் எழுதுவதில்லை.
அவரது நண்பரும், இசையமைப்பாளருமான ஹென்ரிச் கோசெலிட்ஸ், அவர் இயந்திரத்தில் எழுதத் தொடங்கியதில் இருந்து அவரது எழுத்துகளிலும் கருத்துகளிலும் ஒரு குறிப்பிட்ட மாற்றம் இருப்பதாகத் தெரிவித்தார். அவரது உரைநடை மிகவும் சுருக்கமாகவும், ஒரு கடிதம் எழுதுவதைப் போல மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தவிர, அவரது சிந்தனையிலும், தத்துவத்தின் சில உள்ளடக்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இதன் மூலம், நாம் எதில் எழுதுகிறோமோ அதனைப் பொருத்துதான் நாம் எழுதும் செய்தி என்பது வெளிப்படுகிறது. நமது நடத்தையும், உணர்ச்சி அம்சங்களும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்துவதாக நவீன அறிவியல் கூறுகிறது.
நம் மனம் என்பது உடலற்ற கருத்துகளின் உலகம் அல்ல. விவரிக்க முடியாத நிகழ்வுகளை விளக்குவதற்கு, நம் உடலையும் நம் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், நேர்மறை மற்றும் எதிர்மறை உள்ளடக்கம் இருக்க கூடிய வார்த்தைகள் காண்பிக்கப்பட்டன. அதில் பங்கேற்றவர்களிடம் ஒரு ஜாய் ஸ்டிக்கை கொடுத்து அதன் மூலம் வார்த்தை “நல்லது” அல்லது “கெட்டது” என்பதைக் குறிக்க வேண்டும் என கூறப்பட்டது.
அப்போது, அதில் பங்கேற்றிருந்தவர்களில் பாதி பேர் அவர்களின் உடலை நோக்கி ஜாய் ஸ்டிக்கை இழுத்து நல்லது என சில வார்த்தைகளை குறிப்பிட்டனர், மீதி பேர் தங்களுக்கு எதிர்புறம் ஜாய் ஸ்டிக்கை நகர்த்தி நல்லது என குறிப்பிட்டனர்.
இந்த ஆய்வில் பொருள்-இயக்கம் இணக்கத்தன்மையின் ஒரு நிகழ்வு கவனிக்கப்பட்டது. இணக்கமான நிகழ்வுகள் குறித்து மக்கள் விரைவாக பதிலளித்தனர், இதில் ஜாய் ஸ்டிக்கை தங்களுடைய உடலுக்கு நெருக்கமாக கொண்டு “நல்லது” என்றும் அதை எதிர்புறம் நகர்த்துவதன் மூலம் “கெட்டது” என்று பதிலளித்திருந்தது கணக்கில் கொள்ளப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், தட்டச்சு செய்வதன் மூலம் அல்லது கையால் எழுதுவதன் மூலம் கற்றுக்கொண்ட சொற்களின் குறுகிய மற்றும் நடுத்தர கால நினைவுகளை ஒப்பிடுகிறது.
பென்சில் மற்றும் காகிதத்தில் கற்கும் போது ஞாபகம் வைத்துக்கொள்வது அதிகமாக இருந்தது. மற்றொரு ஆய்வில், பெரியவர்கள் பென்சில் அல்லது கீ போர்ட் மூலம் தாங்கள் எழுத வேண்டிய புதிய எழுத்துகளை கற்றுக்கொண்டனர் என கூறியது அந்த ஆய்வு.
முடிவில் இரண்டு முறைகளுக்கு இடையே நினைவுபடுத்துவதில் வேறுபாடுகள் இல்லை, ஆனால் விசைப்பலகை கற்றவர்கள் காலப்போக்கில் பெரும்பாலான விஷயங்களை மறந்துவிட்டனர்.
சில வல்லுநர்கள் பென்சிலைப் பயன்படுத்துவதன் நன்மையை நியாயப்படுத்துகிறார்கள். கையால் எழுதுவது என்பது நமது உடலோடு ஒன்றியுள்ள ஒன்றாக இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு எழுத்துக்கும் மிகவும் சிக்கலான மற்றும் குறிப்பிட்ட சென்சார் செயல்முறைகளின் தொகுப்பாக உள்ளது.
எழுதுவதன் மூலம் மிகவும் சிக்கலான மற்றும் தனித்துவமான நினைவகத்தை உருவாக்கும், அதன் விளைவாக, நினைவாற்றல் மற்றும் நினைவுபடுத்துதல் எளிதாக இருக்கும். இதனால், சராசரி அம்சங்களைக் கொண்ட ஒருவரை விட இரண்டு மீட்டர் உயரமுள்ள அல்பினோவை நினைவில் கொள்வது எளிது.
கையெழுத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால், மனதில் நாம் வாசித்த, நுகர்ந்த அனைத்தையும் தட்டச்சு(type) செய்வது மிகவும் கடினம். இது வார்த்தை நினைவூட்டல் செயல்பாடுகளை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த சிக்கலுக்கு காரணம், நாம் அதிக வேகமாக தட்டச்சு செய்வது தான். ஏனெனில், ஒரு யூஜிட் நேரத்தில் நாம் அதிகம் டைப் செய்து விடுவோம், ஆனால், அவற்றை நினைவில் வைக்கவும், வாசிக்கவும் நேரம் போதாது.
நாம் தாய் மொழியில் எழுதாமல், வேறு மொழியில் எழுதுவதில் உள்ள வேறுபாடுகளை விளக்குவதற்கு கருத்து சார்ந்த ஆய்வுகள் உள்ளன. கீ போர்ட் மூலம் எழுதும் பணி மிகவும் சிக்கலானதாக இருப்பதால், நாம் வாசிக்கும் உள்ளடக்கங்களும் அதிகமாக இருப்பதாக மற்ற ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
விசைப்பலகை போன்ற எழுதும் கருவிகள், ஒருவர் எழுதுவதில் செயலாக்கத் திறனை பாதிக்கலாம். நாம் எந்த கருவிகளில் எழுதுகிறோம் என்பதைப் பொருத்து, அந்த உள்ளடக்கத்தின் கோணம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஒரு உள்ளடக்கத்தை மொழிபெயர்க்கும்போது அது கடினமாக இருந்தால், அது எழுதுபவரின் சிந்தனையில், யோசனையில் இடர்பாடுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அந்த உள்ளடக்கம் சார்ந்த தகவல்களும் மறந்துவிடும்.
பல சோதனைகளில், கையால் எழுதும் திறன்களில் பயிற்சிக்குப் பிறகு, கையால் எழுதிய உள்ளடக்கத்தில் முன்னேற்றம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்கள் விசைப்பலகையைப் பயன்படுத்துவதை விட பென்சில் மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தும் போது தங்களின் உரைகளை சிறப்பாக திட்டமிடுகிறார்கள் என ஒரு ஆய்வு காட்டுகிறது.
வாசிப்பு மற்றம் எழுதும் திறனில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கீ போர்டால் அதிக நன்மைகள் உள்ளது
மறுபுறம், கீ போர்டுகள் நமக்கு பல நன்மைகளைத் தந்துள்ளன என்பதை அங்கீகரிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கையால் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் கணினியில் எழுதப்பட்டவற்றை ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
அதில், கீ போர்டால் எழுதப்பட்ட புத்தகங்கள் மிக நீளமானதாகவும், பல தரப்பட்ட உள்ளடக்கத்தை கொண்ட நல்ல தரத்திலும் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், வாசிப்பு மற்றம் எழுதும் திறனில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கீ போர்டால் அதிக நன்மைகள் உள்ளது. இருப்பினும், இந்த ஆய்வுகளில் சில நேரங்களில் அவர்கள் செய்யும் சோதனை முறைகளும், அதன் மூலம் எடுக்கப்படும் முடிவுகளும் பொதுமைப்படுத்தப்படுவதால், அவற்றை முழுமைாக நம்புவதிலும் சிக்கல் உள்ளது
‘மேட்ரிக்ஸ் சினிமா டெட்ராலஜி’ உடல் இல்லாத மனம் என்ற கருத்தை முன்வைக்கிறது. ஆனால், மெய்நிகர் உலகில் மட்டுமே இருக்கும் ஒரு சிதைந்த மனம் பிளாட்டோவின் குகைக்குத் திரும்புவது போன்றது இந்த உடல் இல்லாத மனம்.
நிஜ வாழ்க்கையில், மனம் அதன் செயல்பாடுகளை முழு உடலின் செயல்பாட்டுடன் இணைக்கிறது. உடல் இல்லாத மனம் என்ற எண்ணம், கீ போர்ட் மூலம் எழுதும் போது, நமது அறிவாற்றல் அமைப்பு வித்தியாசமாக செயல்படும். அதே கையால் எழுதும்போது, அந்த உள்ளடக்கம், நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.
பின்லாந்து கல்வி முறைகளில் நடப்பது போல் பள்ளியில் கையெழுத்தை நீக்குவது நல்ல யோசனையல்ல என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குழந்தை பருவத்தில் விசைப்பலகைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது பற்றி அல்ல. ஆனால் இந்த தலைப்பில் எதிர்கால ஆய்வுகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும், அவர்களின் முடிவுகளை கல்வி உலகிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.
* ஜெவியர் மரின் செர்ரானோ, முர்சியா பல்கலைக்கழகத்தில் மொழி உளவியல் மற்றும் சிந்தனை உளவியலின் பேராசிரியராக உள்ளார், மைகுயில் ஏஞ்சல் பெரிஸ்-சான்ஜெஸ் ஓலினா வஸ்லெட்ஸ், தனியார் பல்கலைக்கழகத்தில் அடிப்படை உளவியல் மற்றும் முறையியல் துறையில் முழுப் பேராசிரியராக உள்ளார்.