மகளிர் இடஒதுக்கீடு மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேறியது!!
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று, அந்த மசோதா நிறைவேறியது. இதற்கிடையே, மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் இன்று வரை நடைபெற்றது.
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. 215 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.