;
Athirady Tamil News

பிள்ளையானை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை?

0

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை செய்யப்பட்டார். கோட்டாவுக்கு ஆதரவாக செயற்பட்ட சுரேஷ் சலே புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர், 600 பொலிஸாரை கொன்று குவித்தவர், திரிபோலி குழுவின் தலைவராக பதவி வகிப்பவர், இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதென்பது சந்தேகத்துக்குரியது.

திரிபோலி குழு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழுவின் தலைவருக்கு தற்போது இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது

குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்புப்படுத்தி ‘சொனிக், சொனிக் ‘ என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது. புலனாய்வு அதிகாரி ஒருவரையே சொனிக் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது. இந்த சொனிக் என்ற அதிகாரி தான் பொடி சஹ்ரானை சந்தித்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்ததாக குறிப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதலுக்கு மலேசியாவில் உள்ள அமைப்பு ஒன்று தான் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்தது. தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ராஜபக்ஷக்களின் முகவர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளார்கள். அவர்களை வைத்துக் கொண்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பாராளுமன்ற தெரிவுக்குழு சமர்ப்பித்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை” என்றார்.

’தொங்கும் சனல் 4 கயிறு மரணக் கயிறாக மாறும்’ !!

’ராஜபக்ஷகளை தொடர்புடுத்தி திசை திருப்ப வேண்டாம்’ !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இருநாள் விவாதம் !!

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி!! (கட்டுரை)

ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!

உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!

“இது அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி” !!

எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!

எதற்காக வீடியோ நீக்கப்பட்டது?

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!!

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.