உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் செல்லாது!!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நேற்று(21)இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண, இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என ஏகமனதாக ஒப்புதல் பெறப்பட்டது.
பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் ஏகமனதாக உடன்பாடு எட்டப்பட்டது.
கள அலுவலர்கள் தங்களது தேர்தல் அதிகார வரம்பில் வாக்குகளை கோருவதற்கு எதிர்நோக்கும் இடையூறுகள் குறித்தும், அந்த தடைகளை நீக்க உரிய சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின்படி, திருத்தப்பட்ட சட்டமூலமொன்றை மீண்டும் திருத்தத்திற்கு முன்னர் இருந்த முறைக்கு மாற்ற வேண்டுமாயின், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை அங்கீகாரம் மற்றும் வாக்கெடுப்பு தேவை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சேவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் மற்றும் பிராந்திய செயலாளர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் உரிய முறையில் நியமிக்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, பிராந்திய செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக அதிகாரிகளின் இட ஒதுக்கீடும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.