சீனாவில் முக்கிய நபர்கள் தீடீர் மாயம்!
சீனாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு திடீரென்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் விசாரணை வட்டத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ் அமைப்பினால் விசாரணை நடைபெறுகிறது எனில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நாட்டின் சட்டங்களை அல்லது கட்சி விதிமுறைகளை மீறியுள்ளதாக கருதப்படும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் ராணுவ அதிகாரி என்றால் கட்சி சார்ந்த விசாரணை அமைப்பே விசாரித்து தண்டனை வழங்கும் என கூறப்படுகிறது.இதற்கு முன்னர் சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கின் கேங் கடந்த ஜூன் 25ம் திகதியில் இருந்தே மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு இராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் 10 பேர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இறுதியாக ஆகஸ்ட் 29ம் திகதி பொதுவெளியில் காணப்பட்டுள்ளதாகவும்,ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கும்சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு திரும்பிய பின்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவரின் செப்டம்பர் 7, 8ம் திகதிகளில் செல்லவிருந்த வியட்நாம் பயணத் திட்டத்தை செப்டம்பர் 3ம் திகதி பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கின் கேங் இதே போன்று, ரஷ்யா மற்றும் வியட்நாம் அதிகாரிகளை சந்தித்து திரும்பிய பின்னர் தான் மாயமாகியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை தொடக்கம் சீனாவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் சியாவோ யாகிங் மற்றும், ராணுவ தளபதி லி யுச்சாவும் (Li Yuchao) மாயமாகியுள்ளார்.
இவர்களை பற்றிய எந்த தகவலும் இப்போது வரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.