டொனால்ட் ட்ரம்ப் உயிரழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் ட்ரம்ப் ஜூனியரின் இணையதள பதிவு பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது .
2016 முதல் 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
2020 தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்ப் இறந்து விட்டதாக ட்ரம்பின் மூத்த மகனான ட்ரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தில் இவ்வாறானதொரு செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
“எனது தந்தை டொனால்ட் ட்ரம்ப் காலமானார் என்பதை கனத்த இயத்துடன் அறிவிக்கிறேன். அவருக்குப் பதிலாக நான் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவேன்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க நேரப்படி காலை 8.46க்கு அவர் இந்த பதிவு பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவானது பல மணி நேரங்களில் பல இலட்ச பார்வையாளர்களை கடந்து பரபரப்பானது.
ஆனால் அதன் பின்னர் உண்மை தகவல் வெளியாகியது.
ட்ரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்து இவ்வாறான பதிவுகளை பதிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது மட்டுமன்றி ஜோ பைடனுக்கு எதிரான கருத்துக்களும் வட கொரியாவிற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்த பதிவு வெளியாகிய 20 நிமிடங்களில் போலி செய்தியை மறுத்து டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை பதிவிட்டார் .
மேலும் ட்ரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டு பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.