;
Athirady Tamil News

பொசுக்குனு எதிர்கட்சியை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. எம்.பி.: பரபரத்த பாராளுமன்றம்!!

0

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கியது. இன்றுடன் (செப்டம்பர் 22) இந்த சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கூட்டத் தொடரின் போது பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி பி.எஸ்.பி. தலைவர் தனிஷ் அலிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்த சம்பவம், அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சந்திரயான் 3 திட்டம் குறித்த விவாதத்தின் போது பேசிய தெற்கு டெல்லி எம்.பி. பிதூரி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உடனடி உத்தரவு பிறப்பித்தார். தனிஷ் அலிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்த சமயம், மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் சிரித்துக் கொண்டு இருந்தார். பிதூரியின் கருத்துக்களுக்கு எதிர்கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா, பிதூரியிடம் பேசியதாகவும், அப்போது பிதூரி பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவையில் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்று பிதூரியிடம் சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா பிதூரிக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். மேலும், முஸ்லீம்கள் மற்றும் ஒ.பி.சி.-யினரை இழிவுப்படுத்துவது பா.ஜ.க. கலாசாரத்தில் உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.