;
Athirady Tamil News

அமெரிக்க பாப் இசை பாடகி குறித்து முதல் கல்வி கருத்தரங்கம்: மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது!!

0

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விப்ட். 33 வயதான இவர் கிராமி விருதை வென்றுள்ளார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தனது இசை சுற்றுப்பயணத்தை சமீபத்தில் தொடங்கினார்.

5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், கொரோனாவுக்கு பிறகு முடங்கிய பொருளாதாரம் மீண்டு வருவதாக ஏற்கனவே பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது. அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆன்லைன் வழியாகவும் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.