;
Athirady Tamil News

இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை வருகிறது- பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை!!

0

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.