நேபாளத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்த ஆசிரியர்கள் : மூடப்பட்டன பாடசாலைகள் !!
நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்களின் பாரிய வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள
நேபாள நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
100,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும், அதேவேளை நேற்று (22) அந்நாட்டு நாடாளுமன்றுக்கு முன்பாக எதிர்ப்பு பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.