போர்க்களத்தில் மோதல் தீர்க்கப்படும் : ஐ.நாவிடம் கூறியது ரஷ்யா !!
உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் போர்க்களத்தில் மோதல் தீர்க்கப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இன்று(23) நியூயோர்க்கில் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உக்ரைனால் முன்மொழியப்பட்ட சமாதானத் திட்டம் “முற்றிலும் சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.
உக்ரைனின் முன்வைத்த 10 அம்ச சமாதானத் திட்டம் குறித்து அவர் கூறுகையில்,
“இது முற்றிலும் சாத்தியமில்லை. இதைச் செயல்படுத்த முடியாது. இது யதார்த்தமானது அல்ல, எல்லோரும் இதைப் புரிந்துகொள்கிறார்கள்.
ஆனால், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரே அடிப்படை இதுதான் என்று அவர்கள்(உக்ரைன்) கூறுகிறார்கள்.” என்றார்.
அவரது உரையில் சமரசத்திற்கான எந்த நகர்வுகளையும் காணமுடியவில்லை என போரியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.