கனடா பிரதமருக்கு எதிராக வெடித்தது போராட்டம் !!
இந்தியாவுக்கு எதிரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு எதிராக புதுடில்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் இடம்பெற்றுள்ளது.
தம் நாட்டின் மீது குற்றஞ்சாட்டியதுடன், காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமரின் செயற்பாட்டை கண்டித்து, ஐக்கிய ஹிந்து முன்னணி அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜஸ்டின் ட்ரூடோவின் செயற்பாட்டைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கனடா துாதரகத்தில் ஒப்படைத்தனர்.
புதுடில்லி-வட அமெரிக்க நாடான கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18இல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இது பெரும் இராஜதந்திரப் போராக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.