நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தும் பிரான்ஸ் !!
நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நைஜரில் ஏற்பட்டுள்ள ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, சில மணி நேரங்களில் பிரான்ஸ் தனது தூதரை திரும்பப் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஒத்துழைப்பு
நைஜருடனான இராணுவ ஒத்துழைப்பு “முடிந்துவிட்டது” என்றும் பிரெஞ்சு துருப்புக்கள் “வரவிருக்கும் மாதங்களில்” வெளியேறும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதிஅன்று நைஜரைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்குழு, அதிபர் முகமது பசோமை பதவி நீக்கம் செய்தது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
தலைநகர் நியாமியில் பிரெஞ்சு இருப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நைஜரில் சுமார் 1,500 பிரெஞ்சு வீரர்கள் வெளியேறுவர் எனக் கூறப்படுகிறது.