;
Athirady Tamil News

யாழில் ஏழு பிரதேசங்களில் புதிய மணல் அகழ்வு… அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிப்பு.!!

0

யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பகுதியில் மணல் அகழ்விற்காக 7 புதிய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டது.

குடத்தனை,குடத்தனை வடக்கு அம்மன் மேற்கு, மணக்காடு, நாகர்கோயில் கிழக்கு நாகர்கோயில் தெற்கு உட்பட ஏழு பிரதேசங்களில் 18 இடங்கள் மணல் அளவுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதன்போத கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்டத்தில் மணலுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தமக்கு மணல் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகளை வழங்கி வருகின்றனர்.
அது மட்டுமல்லாது யாழ்ப்பாண பார ஊர்தி சங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டு பணத்தை செலுத்திய நிலையிலும் தமக்கான மணல் உரிய காலப் பகுதியில் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட வடமராட்சி பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் மணல் அகழ்வுக்கு சில அமைப்புகள் மட்டும் சம்மதம் வழங்கியுள்ள நிலையில் வழங்கியவர்களிடமே தொடர்ச்சியாக மணல் அகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கனியவளம் அரசுக்கு சொந்தமான நிலையில் அதை தர மாட்டோம் என கூறுபவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடலின் போது அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள் இப்போது மாறிப் பேசுகிறார்கள் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.