குன்னூர்: 100 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 பேர் பலி..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
54 சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் 30 க்கு மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தென்காசி கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து குன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவவின்படி குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
முதற்கட்ட தகவல்களின்படி கடையம் பிரகாசபுரத்தை சேர்ந்த உயிரிழந்தவர்களின் விவரம்..
1.நிதின் (15)
2.தேவிகலா (36) ராமாத்திசாலை கடையம்
3. முருகேசன் (65), ஆழ்வார்குறிச்சி
4.முப்பிடாத்தி (67) கடையம் ஆழ்வார்குறிச்சி
5. கவுசல்யா (25)
6. இளங்கோ(67)
உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.