ஆதித்யா எல் 1- அசத்தலான அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் .1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அதன் செயல்பாடு மற்றும் பயணம் குறித்து இஸ்ரோ அசத்தலான தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி ஆதித்யா எல்.1 விண்கலம் தற்போது 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கு இடையே
சூரியனுக்கும் பூமிக்கு இடையே லாக்ரேஞ்சியான் புள்ளி ஒன்றை நோக்கி ஆதித்யா விண்கலம் பயணித்து வருவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
மேலும் பூமியின் ஈர்ப்பு தாக்கத்திற்கு அப்பால் இஸ்ரோ விண்கலத்தை அனுப்புவது இரண்டாவது முறையாகும் எனவும் இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
சூரியனின் வெளிப்புறத்தில் ஏற்படும் வெப்ப மாறுபாடுகள்
ஆதித்யா எல் விண்கலம் சூரியனின் வெளிப்புறத்தில் ஏற்படும் வெப்ப மாறுபாடுகள் மற்றும் வெளிப்புறத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.