அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.18 ரூபாயிலிருந்து 316.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 329.37 ரூபாயிலிருந்து 329.62 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
விற்பனைப் பெறுமதி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாயிலிருந்து 316.71, ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயிலிருந்து 328 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 27 சதம் – விற்பனை பெறுமதி 329 ரூபா 01 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 32 சதம் – விற்பனை பெறுமதி 402 ரூபா 98 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 92 சதம் – விற்பனை பெறுமதி 349 ரூபா 94 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 05 சதம் – விற்பனைப் பெறுமதி 243 ரூபா 98 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 61 சதம் – விற்பனைப் பெறுமதி 213 ரூபா 31 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 46 சதம் – விற்பனைப் பெறுமதி 242 ரூபா 11 சதம்.