;
Athirady Tamil News

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சி.ஐ.டிக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

0

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சி.ஐ.டிக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் முழுமையான அறிக்கை விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு செய்தியாளர் தகவல்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார் என்று புலனாய்வு செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள மூன்று ஆங்கிலமொழி அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார். நீதிபதி சரவணராஜா இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவு தேடுகின்றது, மற்றும் இந்திய உளவுப் பிரிவும் தேடுகின்றது என அவர் கூறினார்.

மேலும், மிகவும் சிறப்பாக செயற்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். அவர் முதலில் சிங்கப்பூர் சென்றிருக்கின்றார்.

கொழும்பிற்குச் சென்று தனது வாகனத்தை விற்ற நீதிபதி சரவணராஜா, மிக முக்கிய விஐபி ஒருவரின் வாகனத்தையே தனது தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரது பதவி விலகலுக்கு காரணமாக குறிப்பிடப்பட்டவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.