;
Athirady Tamil News

டெல்லி பயணம் முடிந்த பிறகு அதிமுக எதிர்ப்பில் அண்ணாமலை தீவிரம் காட்டுவாரா..?

0

இன்று  நடைபெறவிருந்த பாஜகவின் உயர்மட்ட கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வேறு ஒரு தேதியில் அல்லது நேரம் மாற்றப்பட்டு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக
அதிமுக கூட்டணியை விட்டு விலகியதை தொடர்ந்து தமிழக பாஜக தேர்தலை எவ்வாறு சந்திக்கபோகிறது என்ற கேள்விகள் தற்போது அதிகளவில் எழுந்துள்ளது. அதிமுக பக்கம் சாயும் கட்சிகளை தவிர்த்து பாஜக புதிய கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் NDA கூட்டணியில் அதிக வாக்குகளை அறுவடை செய்தது அதிமுக தான். சுமார் 19.39 % வாக்குகளை அதிமுக பெற, பாமக 5.36 % வாக்குகளும், பாஜக 3.66 % வாக்குகளை பெற்றிருந்தன. இந்நிலையில், அதிமுக வெளியேறிய காரணத்தால் NDA’க்கு இந்த தேர்தல் மத்தியில் போலவே தமிழகத்திலும் சவாலான ஒன்று தான். நாடாளுமன்ற தேர்தலில் 3.66 % வாக்குகளை பெற்ற பாஜக, சட்டமன்ற தேர்தலில் 2.62 % வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.ஆனால், இதிலும் அதிமுகவின் வாக்குகளும் சேரும் என்பதால், கட்சிகள் பிரிந்த நிலையில், அது குறையலாம்.

அதிமுகவை எதிர்பாரா அண்ணாமலை..?
தற்போது கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வரும் – அண்ணாமலையின் பயணம் எது போன்ற தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி(ஏதேனும் இருந்தால்) அது அதிமுகவை தாண்டி பாஜக கூட்டணிக்கு போகுமா? போன்ற பல கேள்விகள் உள்ளன.

தற்போது டெல்லி சென்றுள்ள அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார். அவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும், இனி நேரடியாக அதிமுகவையும் அவர் தாக்கி பேசுவாரா? அது எம்மாதிரியான தாக்கத்தை கொடுக்கும் போன்ற கேள்விகளும் உள்ளன. நாளை நடக்கவிருந்த பாஜகவின் தமிழக உயர்மட்ட கூட்டம் தலைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தேர்தல் வியூகங்கள் குறித்து அண்ணாமலைக்கு டெல்லியில் ஏதேனும் அறிவுரைகள் வழங்கப்பட பின்பு இக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.