மில்லியன் கணக்கான பிரித்தானிய ஊழியர்களுக்கு மகிழ்வான செய்தி… அமுலுக்கு வரும் ஊதிய உயர்வு!
பிரித்தானிய ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 1,000 பவுண்டுகள் ஊதிய உயர்வு உறுதி என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்துள்ளார்.
மணிக்கு 11 பவுண்டுகள்
பிரித்தானியாவில் தற்போதைய தேசிய ஊதியம் மணிக்கு 10.42 பவுண்டுகள் என உள்ளது. இதை மணிக்கு 11 பவுண்டுகள் என உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட உள்ளது. திங்கள்கிழமை மான்செஸ்டரில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட்.
இந்த புதிய முடிவால் பிரித்தானியாவில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களில் 2 மில்லியன் பேர் பயனடையலாம் என்றே நம்பப்படுகிறது.
ஆண்டுக்கு 1,000 பவுண்டுகள்
அத்துடன், அரசாங்க சலுகைகளை பெற்றுக்கொள்வதுடன், தங்களுக்கு என தனியாக வேலை எதையும் தேடிக்கொள்ள முயற்சி முன்னெடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்த ஊதிய உயர்வானது, முழுநேர வேலை செய்யும் ஒருவரின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 1,000 பவுண்டுகள் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.
பிரித்தானியாவில் அடிப்படை ஊதியத்தை வரைமுறைப்படுத்திய பின்னர் ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் முழுமையான வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனவும் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.