முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..!
முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறையைச் சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் முல்லைத்தீவு மாவட்ட தலைமை காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவில் உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்துள்ளார்.
முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கென புதிதாக கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.
அக்கட்டடமானது முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக அமைந்துள்ளது.
அந்தப் புதிய கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையிலேயே நேற்றைய தினம் (02) மாலை காவல்துறை உத்தியோகத்தர் தூக்கில் தாெங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தரின் இறப்புக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.