தீவிரமடையும் நீதிபதி சரவணராஜா விவகாரம்: கொழும்பில் ஒன்றுதிரளவுள்ள பெருமளவிலான சட்டத்தரணிகள்
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றமை தொடர்பான விவகாரத்திற்கு நீதி கோரி பெருமளவிளான சட்டத்தரணிகள் கொழும்பில் ஒன்றிணையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக இன்றையதினம் (05.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று (05.10.2023) மாவட்ட சட்டத்தரணிகள் நான்காவது நாளாக தமது பணி பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
எதிர்வரும் 09ஆம் திகதி கொழும்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையிலே இலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள சட்டத்தரணிகளும் இணைந்து ஒரு பணிப்பகிஷ்கரிப்பையும் எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.