மீண்டும் நெருக்கடி நிலை: வரி மற்றும் விலை அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த ஆய்வு ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரி அதிகரிப்பு
கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்கு சமாந்திரமாக இடம்பெறும்.
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா பரிஸ் கிளப் சீனா ஆகிய நாடுகள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. சில விடயங்களிற்கு தீர்வை கண்டதும் பணியாளர் மட்ட உடன்பாடு சாத்தியமாகலாம்.
நிதியமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.