கைலாசாவில் ரஞ்சிதாவிற்கு எதிராக கிளம்பும் சீடர்கள்: அப்செட்டில் நித்யானந்தா
நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்ய வந்த ரஞ்சிதா எப்படி தலைமை பொறுப்புக்கு வரலாம் என சீடர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நித்யானந்தாவின் கைலாசா
பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஆகியவற்றை அறிவித்தார்.
மேலும், பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் ரீதியாக ஒப்பந்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இதனிடையே, நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய நிலையில் மீண்டும் அவர் நேரலையில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.
கைலாசா சார்பில் ஐ.நா சபை மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது பிரதிநிதிகள் எப்படி கலந்து கொள்ள முடியும் என்ற கேள்விகள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்த ஐ.நா செய்தி தொடர்பாளர்,”அவர்களின் பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது” எனக் கூறினார்.
ரஞ்சிதாவிற்கு எதிராக சீடர்கள்
இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம், கைலாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை, நித்யானந்தா அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. பின்பு, கைலாசாவின் அனைத்து கிளைகளிலும் ரஞ்சிதா தீவிரம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நித்யானந்தாவை போல, ரஞ்சிதாவும் சொற்பொழிவு ஆற்றிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இதனால், ரஞ்சிதா அடுத்த கட்ட இடத்திற்கு காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்வதற்காக வந்தவர், மருந்து மாத்திரை எடுத்து கொடுத்தவர் எல்லாம் கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு எப்படி வர முடியும் என சீடர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இப்படி, சீடர்கள் மத்தியில் இரு பிரிவாக செயல்படுவது நித்யானந்தாவுக்கு அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.