நீதிபதி சரவணராஜா விவகாரத்தில் தப்பிய சரத் வீரசேகர
நீதிபதி வெளியேறியிருக்காவிட்டால் அவரும் சில நாட்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சரவணராஜாவை சட்ட மா அதிபர் அழைத்து, அச்சுறுத்தியது மாத்திம் அல்லாமல் தீர்ப்பை மாற்றுமாறு அச்சுறுத்தல் கலந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றார்.
இவற்றுக்கு அடி பணியாத காரணத்தினால் நீதிபதியின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது எனவும் சுகாஸ் கூறினார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் சரத் வீரசேகர அங்கு சென்று நீதிபதியோடு உரையாட முற்பட்டது சரியான விடயம் அல்ல. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிக்கு அவர் அச்சுறுத்தலையே விடுத்தார். ஆனால் பொலிஸார் சரத் வீரசேகரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றும் சுகாஸ் தெரிவித்தார்.