உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: புதிய ஆயுதங்களுடன் களமிறங்கும் புடின்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர்களின் வருடாந்திர சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யா புரேவெஸ்ட்னிக் (Burevestnik) என்ற அணுசக்தி திறன் கொண்ட பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் க்ருஸ் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாகவும் தெரித்துள்ளார்
தலைசிறந்த அணு ஆயுதம்
அத்தோடு புடின், ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த சரியான திட்டம் யாருக்கும் கிடையாது, அப்படி யாருக்கேனும் அந்த எண்ணம் இருந்தால் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் எதிரிகளின் வானில் பாயும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவை எதிர்க்கும் ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சர்மாட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வருங்காலத்தின் தலைசிறந்த அணு ஆயுதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா அணு ஆயுத சோதனையை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை, ஆனால் ரஷ்யா அதை ஏற்று 1990ல் இருந்து அணு ஆயுத சோதனை எதையும் செய்யவில்லை.
தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் அணு ஆயுத தடைக்கு வழங்கிய ஒப்புதலில் இருந்து ரஷ்யா வெளியேறவும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.