;
Athirady Tamil News

அமெரிக்க மாளிகையில் 540 நாட்கள் வாடகை தராமல் இருக்கும் விருந்தினர்!

0

அமெரிக்காவின் ப்ரென்ட்வுட் மலைப்பகுதியில் Airbnb விருந்தினர் மாளிகையை வாடகைக்கு எடுத்த ஒரு பெண், கிட்டத்தட்ட 540 நாட்கள் வாடகை செலுத்தாமல், அங்கிருந்து வெளியேறவும் மறுத்து வருகிறார். மேலும் தான் இடத்தை காலி செய்ய வேண்டுமென்றால், வீட்டின் உரிமையாளர் 1,00,000 டாலர் இடமாற்றக் கட்டணம் தர வேண்டுமென அவர் நிர்பந்திப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாண்டா மோனிகாவில் பல் அறுவை சிகிச்சைப் பயிற்சி பெற்ற டாக்டர். சாஸ்கா ஜோவனோவிக், கடந்த ஆண்டு ஏப்ரலில் Airbnb-ல் தங்கியிருந்த எலிசபெத் ஹிர்ஷ்ஹார்னுக்கு ஹோம் ஷேரிங் பிளாட்ஃபார்ம் மூலம் தனது குடியிருப்பை வாடகைக்கு விட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அன்று முதல் எலிசபெத் வாடகை செலுத்தவில்லை என்பது தான் இங்கே முக்கியம்.

ஜோவனோவிக் தனது விருந்தினர் மாளிகையை வாடகைக்கு விட வேண்டும் என்பதால், எலிசபெத்தை வெளியேற்றுவதற்காக படாத பாடு படுகிறார். தான் அங்கு தங்குவதற்கு உரிமை இருப்பதாகக் கூறுகிறார் எலிசபெத். இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸின் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், அவரை வெளியேற்றுவதற்கு சட்டப்பூர்வ காரணம் எதுவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

சாஸ்கா ஜோவனோவிக், தனது விருந்தினர் மாளிகையை ஆக்கிரமிப்புச் சான்றிதழோ அல்லது ஷவர் கட்டுவதற்கான அனுமதியோ இல்லாமல் வாடகைக்கு விடத் தொடங்கினார். எனவே, கலிபோர்னியா சட்டத்தின்படி, இது சட்டப்பூர்வ வாடகை அல்ல என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. தவிர, எலிசபெத் இடத்தை காலி செய்ய வேண்டுமெனில் உரிமையாளர் 1,00,000 டாலர் தர வேண்டுமென அவரது வழக்கறிஞர் கிளைம் செய்கிறார்.

எலிசபெத் ஹிர்ஷ்ஹார்ன் செப்டம்பர் 2021-ல் விருந்தினர் மாளிகையை ஒரு இரவுக்கு 105 டாலர் என ஆறு மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.