;
Athirady Tamil News

20 வயதில் முதல் நிறுவனம்… தற்போது ரூ.30,000 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு தலைவர்

0

தமது 20வது வயதில் மசாலா வர்த்தக நிறுவனம் ஒன்றை தொடங்கியவர், தற்போது தங்கம் மற்றும் வைர நகைகள் வர்த்தகத்தால் ரூ.30,000 கோடி மதிப்புள்ள நிறுவனங்களுக்கு தலைவராக உள்ளார்.

கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அகமது
மலபார் குழும நிறுவனங்களின் தலைவரான எம்.பி. அகமது என்பவரே தமது 20 வயதில் மசாலா வர்த்தக நிறுவனம் ஒன்றை துவங்கியவர். கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அகமது வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

தமது 17 வயதிலேயே வேளாண் பொருட்கள் தொடர்பான நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார். அதன் பின்னர் 1981ல் தமது 24வது வயதில் கொப்பரை மற்றும் மசாலாப் பொருட்களின் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளார்.

தொடக்கத்தில் ஏலக்காய், மிளகு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்தவருக்கு, தற்போதைய சூழலில் தமது வணிகத்திற்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.

தொடர்ந்து முன்னெடுத்த ஆய்வில் தங்க நகைகள் வியாபாரம் ஒரு பெரிய அமைப்புசாரா தொழில் என்றும் அதன் மீது அதிகமாக மக்களின் ஆர்வம் இருப்பதையும் அகமது கண்டறிந்தார்.

மலபார் தங்க நகைகள் நிறுவனம்
இதனையடுத்து துணிச்சலுடன் நகை வியாபாரத்தில் களமிறங்கிய அகமது, தமது சொந்த நாட்டின் பெயரையே நிறுவனத்திற்கும் சூட்டினார். அகமதுவுக்கு சொந்தமான மலபார் தங்கம் மற்றும் வைர நகைகள் கடைகள் 10 நாடுகளில் மொத்தம் 276 எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது.

இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உட்பட ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

2022ல் மட்டும் மலபார் தங்க நகைகள் நிறுவனம் ரூ.30,000 கோடி அளவுக்கு விற்பனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 2023ல் ரூ.45,000 கோடி அளவுக்கு விற்பனையை எட்ட வேண்டும் என்றே இலக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.