‘ரணிலுக்காக நாம் 2024’ மட்டக்களப்பில் வகுக்கப்பட்ட பாரிய உருவப்படம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ள நிலையில் அவரின் பாரிய உருவப்படம் ஒன்று நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் மட்டக்களப்பில் இடம்பெறும் அதிபரின் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் நிகழ்வுகளை அறிக்கையிட அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
அதிபருக்கு வரவேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கு செல்லவுள்ளார்.
இதன்போது அதிபருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ‘ரணிலுக்காக நாம் 2024’ என்ற பாரிய உருவப்படம் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளது.