;
Athirady Tamil News

ரயில்வே ஊழியரால் தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து!

0

மஹரகம பிரதேசத்தில் பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்த நிலையில், ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ஊழியரால் அங்கு நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மஹரகம ரயில் நிலையத்தில் இருந்து கொட்டாவை நோக்கி சுமார் 600 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள காணியில் இருந்த 40 வருடங்கள் பழமையான பலா மரமொன்று ரயில் பாதையில் விழுந்துள்ளது.

30 நிமிடங்களில் ர சீரமைக்கப்பட்ட யில் பாதை
காலை 8 மணியளவில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்த பலா மரம் ரயில் பாதையில் விழுந்துள்ளது.

இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கெமராவிலும் பதிவாகியுள்ள அதேவேளை பலா மரம் ரயில் பாதையில் விழுந்து 02 நிமிடங்களுக்குள் ரயில் ஒன்று கொழும்பு நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பரபரப்படைந்த கேட் காவலர், உடனடியாக செயற்பட்டு கொட்டாவை நோக்கி சுமார் 200 மீற்றர் தூரம் ஓடி ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டினார்.

அதன்பின்னர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவுடன் பலா மரத்தை வெட்டி 30 நிமிடங்களில் ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அவர் அவ்வாறு செய்யவில்லையெனில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நேற்றையதினம் கொழும்பில் பாரிய மரம் ஒன்று பேருந்துமீது விழுந்ததில் அவர் உரியிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.