;
Athirady Tamil News

பயமாக இருக்கிறது… இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்கள் கதறல்: சுற்றி வளைத்த ஹமாஸ்

0

இஸ்ரேல் மீது திடீரென்று கொடூர தாக்குதலை ஹமாஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள நிலையில், இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட பல எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அச்சத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்புடன் இருப்பதாக
இந்திய மாணவர்கள் தற்போது தூதரக உதவியை நாடியுள்ளதாகவும், பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோகு மணவாளன் என்ற மாணவர் தெரிவிக்கையில், மிகவும் பதட்டமாகவும் பயமாகவும் இருக்கிறது.

ஆனால் இஸ்ரேலிய பொலிஸ் படைகள் முகாம் அருகில் எங்களுக்கு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளன என்றார். மற்றொரு மாணவர், விமல் கிருஷ்ணசாமி மணிவண்ணன் சித்ரா தெரிவிக்கையில், தாக்குதல் மிகவும் தீவிரமாகவும் பயங்கரமாகவும் உள்ளது என்றார்.

ஆதித்யா கருணாநிதி நிவேதிதா என்ற மாணவி கூறுகையில், இஸ்ரேலில் தற்போது மத விடுமுறை நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் எதிர்பாராதது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் எச்சரிக்கை சைரன் ஒலி முழங்கியதாகவும், நாங்கள் பதுங்கு குழிகளில் சுமார் 7-8 மணி நேரம் இருந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிணைக் கைதிகளாக சிறை
சனிக்கிழமை திடீரென்று ஹமாஸ் போராளிகள் குழு இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்துள்ளது. சுமார் 20 நிமிடங்களில் 5,000 எண்ணிக்கையிலான ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், குறைந்தது 1104 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல இஸ்ரேலியர்கள் காசாவில் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

ஹமாஸ் தொடுத்த அதிரடி தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. ஈரான், கட்டார் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.