அகதிகளை திருப்பி அனுப்புவோம்… அவுஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுத்த நாடு
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் பப்புவா நியூ கினி நாட்டுக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என அந்த நாடு மிரட்டல் விடுத்துள்ளது.
அகதிகளை கைவிட்ட அவுஸ்திரேலியா
பப்புவா நியூ கினியின் மனிதாபிமான முன்னெடுப்புகளுக்கு நிதியுதவி அளிக்க தவறினால் தங்களுக்கு வேறு வழியில்லை எனவும் பப்புவா நியூ கினி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா தங்கள் அகதிகளை கைவிட்டதாகவே கருத வேண்டும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அவுஸ்திரேலிய அகதிகளுக்கு குடியிருப்பு வசதிகள் உட்பட அனைத்தும் நிறைவேற்றிய வகையில் தற்போது பல நூறு மில்லியன் டொலர்கள் அவர்கள் கடன்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த அகதிகள் மேலும் பப்புவா நியூ கினியில் தங்கியிருக்க வேண்டும் என்றால், அவுஸ்திரேலியா நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். அல்லது அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Port Moresby பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு மட்டும் 40 மில்லியன் டொலர் கடன்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான செலவாக 6 மற்றும் 8 மில்லியன் டொலர் கடன்பட்டிருப்பதாகவும் பப்புவா நியூ கினி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டுக்கும் அதிகமாக அவுஸ்திரேலியா நிர்வாகம் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது 70 அகதிகள்
ஆனால் 2013 மற்றும் 2014ல் பப்புவா நியூ கினிக்கு அனுப்பப்பட்ட அகதிகள் தொடர்பில் தங்களுக்கு பொறுப்பில்லை என்றே அவுஸ்திரேலிய நிர்வாகம் கூறி வருகிறது.
2016 வரையில் பப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றத்தின் சட்டவிரோத ஆளுமையின் கீழ் இருந்த Manus தீவிலேயே அவுஸ்திரேலியாவின் தடுப்பு காவல் முகாம் செயல்பட்டு வந்துள்ளது.
2021ல் இருநாடுகளும் தங்கள் பிராந்திய மீள்குடியேற்ற ஏற்பாட்டை முடித்துக்கொண்டது. ஆனால் 140 அகதிகளும் 10 புகலிடக் கோரிக்கையாளர்களும் பப்புவா நியூ கினியில் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அவுஸ்திரேலியா ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன், எஞ்சியுள்ள அகதிகளுக்கான நிதியுதவியை அளிக்கவும் ஒப்புக்கொண்டது. பலர் அமெரிக்கா, கனடா என வெளியேறியுள்ள நிலையில், தற்போது 70 அகதிகள் மட்டும் பப்புவா நியூ கினியில் எஞ்சியுள்ளதாக கூறுஅப்படுகிறது.