இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறோம் – பிரதமர் மோடி வேதனை!
இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போர் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளி குழுவுக்கு இடையே போர் நிலவி வருகிறது. இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இணைந்து துணை நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா நிலைப்பாடு
தொடர்ந்து, பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் இஸ்ரேல் அரசுக்கும் மக்களுக்கும் உறுதிதுணையாக நிற்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் Adrienne Watson கூறியுள்ளார்.
இதனையடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது என இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதர், கோபி ஷோஷானி குறிப்பிட்டுள்ளார்.