இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்
பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன.
இந்நிலையில், கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் போரை அறிவித்து, இரு தரப்பினருக்கும் இடையே 3 நாள்களாக மோதல் தொடர்ந்து வருகிறது.
உயரும் பெட்ரோல், டீசல் விலை
இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 6 -ம் திகதி 84.58 டொலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று 89 டொலராக உயர்ந்துள்ளது.
இந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 500 நாள்களுக்கு மேல் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் அதிகரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.63 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நேற்றும் இதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது.