இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் கோரிக்கை
இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வத்தீக்கான நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(08) சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியிலான, கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
போர் ஒரு தோல்வி
இவ்விடயம் குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது.
போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்” என்றார்.
இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் அமைதி காக்கும்படி இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது.