தீபாவளி பரிசு காத்திருக்கிறது; ரேஷன் அட்டைதாரர்களே.. – அரசு அறிவிப்பு!
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு சிறப்பு பரிசை மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் தொகுப்பில் 4 பொருட்களுக்குப் பதிலாக 6 பொருட்கள் வழங்கப்படும். 100 ரூபாய்க்கு இந்த உதவியைப் பயனாளிகள் பெறலாம்.
சிறப்பு பரிசு
அதில், 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா-சனா பருப்பு, மாவு மற்றும் அவல் வழங்கப்படும். மேலும், ரேஷன் கிட்டில் மாவு மற்றும் அவல் ஆகிய இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கிலோ ரவா தவிர, உளுந்து, இலவங்கப்பட்டை மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும். அந்த்யோதயா மற்றும் பிற முன்னுரிமைத் திட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இதன் பலனைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதிக்குள் பயனாளிகளுக்கு ரேஷன் கிட்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடியே 66 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைவார்கள். இதற்காக ரூ.530 கோடி அரசால் செலவிடப்பட்டுள்ளது.