படுமோசமான நீரை பருகும் காசா மக்கள்! பகீர் உண்மைகள்
இஸ்ரேலுக்கு எதிரான சண்டைக்கு இடையில், காசா பகுதி குறித்த தகவல்களை அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளன.
காசா
எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா எனும் சிறிய பகுதியை, 1967ஆம் ஆண்டு நடந்த போரில் வென்ற இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
இஸ்ரேல்-எகிப்து மற்றும் மத்திய தரைக்கடலை எல்லைகளாகக் கொண்ட காசா 38 ஆண்டுகள் இஸ்ரேலின் கீழ் இருந்தது.
அதன் பின்னர் சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டில் இஸ்ரேல் தனது மக்கள் மற்றும் ராணுவம் என 9,000 பேரை காசாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனிய ஆளுகையின் கீழ் காசா வந்தது. இங்கு மொத்தம் 20 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள், ஆனால் காசாவின் மொத்த பரப்பளவு 140 சதுர மைல்கள் தான்.
நெருக்கமாக வாழும் மக்கள்
இதன் காரணமாக உலகிலேயே மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியாக காசா உள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவர்களே இங்கு பாதிக்கும் மேல் வசிக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் 96 சதவீதம் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உலக அளவில் வேலை இல்லாத மக்கள் இங்கு தான் அதிகமாம். அதாவது 45 சதவீத காசா மக்கள் வேலையின்றி இருக்கின்றனர்.
வறுமை
இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் 65 சதவீதம் பேர் உள்ளனர். காசாவில் 63 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பு அற்றவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், இங்கு 13 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும். விமான சேவையும் இங்கு இல்லை. ஏனென்றால் 2001ஆம் ஆண்டு விமான நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
காசாவில் வசிக்கும் மக்கள் தொடர் சண்டைகளால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.