;
Athirady Tamil News

இஸ்ரேல் காசா மோதல்: சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு

0

இஸ்ரேல் காசா மோதல் காரணமாக, சுவிஸ் சுற்றுலாத்துறை முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

சுவிஸ் சுற்றுலாத்துறை மீது தாக்கம்
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், அது சுவிஸ் சுற்றுலாத்துறை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் காசா மோதல் தொடர்பில் சுவிஸ் பெடரல் வெளி விவகாரங்கள் துறை விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து சுவிஸ் சுற்றுலாத்துறை ஏஜன்சிகள், இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றுள்ளவர்களை திருப்பி அழைத்துக்கொள்ளும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளன.

சுவிஸ் சுற்றுலா ஏஜன்சிகள், மறு அறிவிப்பு வரும் இஸ்ரேல் தங்கள் சுற்றுலாவை ரத்து செய்கின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணங்களையும் இலவசமாக ரத்து செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து
சுவிஸ் சுற்றுலா ஏஜன்சிகள், இஸ்ரேலில் இருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்குச் சென்ற அனைவரும் நலமாக உள்ளதாகவும், அவர்களை விரைவாக நாட்டுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக, பல்வேறு விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுவருவதாகவும் அவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் சுவிஸ் விமான நிறுவனமான Swiss ரத்து செய்துள்ளது. விமானப் போக்குவரத்து குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று விமான நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.